க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்.!

0
381

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பௌதீக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த சிரத் நிரோதா முதலிடம் பிடித்துள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கினிகத்தேன மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஷெஹானி நவோத்யா நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உபனி லெனோரா, விஞ்ஞான பாடத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதேவேளை, கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த தசுன் ரித்மிகா முதலிடம் பிடித்துள்ளதுடன், பாணந்துறை பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷெஹாரா சிதுமினி, வர்த்தகப் பிரிவில் முடிலிடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 173,444 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here