யாழில் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கள்ளக்காதலன் கைது.!

0
159

யாழ்ப்பணத்தில் நேற்று (1) காதலனால் தீ வைக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதான இரத்தினவடிவேல் பவானி என்பவரே உயிரிழந்தார்.

மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை சேர்ந்த இவர் திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். குடும்பத்தகராறு கரணமாக சில காலமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், வேறு நபர் ஒருவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் யாழ் குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, காதலன் திடீரென பவானியின் தலையில் பெ.ற்.றோ.ல் – ஊ.ற்.றி அவருக்கு தீ வைத்தார்.

தீயில் எரிந்த பவானி கத்திக் கூச்சலிட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து செயற்பட்டு, தீயை அணைத்து, பவானியை போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவே அவர் உயிரிழந்தார்.

பவானியை எரித்த காதலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைதானவர் 40 வயதானவர். அவர் பவானியை எரித்துக் கொல்லும் நோக்கத்துடன், திட்டமிட்டே அங்கு அழைத்து வந்தாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here