தனியார் பேருந்தும் அரச பேருந்தும் மோதி விபத்து; நடத்துனர் உயிரிழப்பு.!

0
183

பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (02) காலை தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை டிப்போவில் கடமையாற்றும் நடத்துனர் என தெரியவந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாணந்துறை பேருந்து நிலையத்தை நோக்கி திரும்ப முற்பட்ட போது கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து தனியார் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here