யாழில் பெரும் சோகம்.. இரு சிறுமிகள் குளத்துக்குள் தவறி விழுந்து பரிதாப மரணம்.!

0
164

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் இரவு உயிரிழந்த, சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு பால் வாங்க சென்றுள்ளனர்.

பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி, துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா, ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது இருவரும் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here