இலங்கை வந்த இளம் இந்திய தம்பதிகள் கடலில் நீராட சென்றபோது உயிரிழப்பு.!

0
171

கிரிந்த பகுதியில் கடலில் குளித்த வெளிநாட்டு தம்பதியொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய இந்தியப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இவர்கள், தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here