முல்லைத்தீவிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்.!

0
283

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here