இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. 4 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்.!

0
218

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக களுத்துறையிலுள்ள (Kalutara) பிரதேசமொன்றில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில் களு என்ற நாயினால் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த (03) களுத்துறை, அகலவத்த – பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் விதானலகே சோமசிறி என்பவரின் குடும்பத்தினரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வழக்கத்தினை விட அதிக சத்தத்துடன் கருப்பு நாயொன்று வீட்டின் பின்புறம் குரைத்துக் கொண்டிருந்த நிலையில், குடும்ப தலைவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நாய் தன்னிடம் ஏதோ சொல்வதினை உணர்ந்த நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தந்தை மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த மலை முழுவதுமாக இடிந்து வீட்டின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தனது வீட்டின் வளர்ப்பு நாயான களுவினால் தங்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கண்ணீருடன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here