கிளிநொச்சியில் புதையல் தேடிய போலீஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது.!

0
174

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. 07.06.2024 நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here