சனி பகவானை வணங்கும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் என்னவென்று இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
1. கோவிலுக்குச் சென்று சனி பகவானை வழிபடும் போது, சனி பகவானை நேராக நின்று கண்களைப் பார்த்து வணங்கக் கூடாது. எப்பொழுதும் சனி பகவானை கண்களை மூடியோ அல்லது பாதத்தையோ பார்த்துதான் வணங்கி வர வேண்டும். நம்பிக்கைகளின்படி சனி பகவானின் கண்களைப் பார்த்து அவரை வணங்கினால் சனி பகவானின் பார்வை நேரடியாக உங்கள் மீது விழும் என்று நம்பப்படுகிறது.
2. சனி பகவானை வழிபடும் போது அணியும் ஆடைகளின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சனி பகவானை வணங்கும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உண்மையில் சனி பகவானை வணங்கும்போது நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இந்த நிறங்கள் சனி பகவானுக்கு விருப்பமான நிறங்கள்.
3. சனி பகவானை வழிபடும் போது திசையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மக்கள் கிழக்கு நோக்கி வழிபடுவார்கள். ஆனால் சனி மேற்கு திசைக்கு அதிபதி. எனவே, நீங்கள் சனி பகவானை வணங்குவதாக இருந்தால், மேற்கு நோக்கி வணங்குங்கள்.
4. சனி தோஷத்தைப் போக்க சனி ஜெயந்தி அன்று கங்கையில் நீராட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
6. சனி ஜெயந்தியில் காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், இன்று அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
சனி ஸ்தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!
சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்