கனடா Markham பகுதியில் அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார்.
சம்பவத்தில் ஜெயகுமார் தனோஷன் 25 அகவையுடைய இளைஞரே இவ் விபத்தில் பலியாகியுள்ளார், இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.