தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவனும் அவரது நண்பரும் இணைந்து பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து கதவை பூட்டிவிட்டு வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் வந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். உயிரிழந்த பெண் அவரது கணவருடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 31 வயதான ஹிங்குரக்கொட பகுதியைச் சேர்ந்த கணவரும் 44 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்த மற்றைய சந்தேகநபரும் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது வீட்டில் ஒரு நாய் கட்டப்பட்டிருந்ததாகவும் குறித்த நாய்க்கு சுமார் 5 நாட்களாக உணவளிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.