அம்பாறை – பொத்துவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்த குழந்தை ரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தந்தை வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாயார், குழந்தையை நீராடுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று வாளி ஒன்றில் நீரை நிரப்பிவிட்டு குழந்தையை அவ்வாளிக்கு அருகில் இருத்திவிட்டு சவர்க்காரம் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதன்போது வீட்டிற்குள் இருந்த மற்றைய குழந்தையின் அழு குரல் கேட்டுள்ள நிலையில் அந்த குழந்தையைப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டின் பின்புறத்திற்குச் சென்ற தாயார்,
குழந்தை வாளிக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து தாயார் குழந்தையை பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.