தையல் இயந்திரத்தால் பறிபோன 17 வயது மாணவியின் உயிர்.. இலங்கையில் நடந்த சோக சம்பவம்.!

0
157

பிலியந்தலை பிரதேசத்தில் செயலிழந்த தையல் இயந்திரமொன்றுக்குப் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரத்தை வழங்க முயன்ற 17 வயது மாணவி மின்சாரம் தாக்கி துரதிஷ்டவசமான உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நிஷானி பியுமிகா என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த குறித்த சிறுமி, நேற்று பாடசாலை முடிந்து தனது சகோதரியுடன் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார்.

தையல் இயந்திரத்தின் மோட்டர் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்கை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளக் பொயிண்டுடன் இணைக்க மாணவி முயற்சித்த போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனை அடுத்து தவறான முறையில் மின்சாரம் பெற முயன்றபோது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கியதில் அவரது அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டு பெண் ஒருவர் வந்து பார்த்தபோது, அறையில் மாணவி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்தது சிறுமியை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நிஷானி பியுமிகாவின் தந்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்ததாகவும்,

தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here