குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த 50 தொழிலாளர்கள் பலியானகி உள்ளனர். இதில் 40க்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்று சொல்லப்படும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் வரை பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று திடீரென்று தொழிலாளர்கள் தங்கியருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது.
இதுபற்றி அறிந்தவுடன் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் வரவில்லை.
இந்த தீவிபத்தில் மொத்தம் 50 பேர் வரை பலியானதாகவும், மேலும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேற்படி கட்டடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளனர். அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட அந்த நாட்டு துணை பிரதமர், கட்டட உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.