காரைதீவில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீராட சென்ற போது துரதிஷ்டவசமாக உயிரிழப்பு.!

0
167

காரைதீவிலிருந்து இம்முறை மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவை சேந்த மாணவன் எஸ்.அக்சயன் இன்று (14) நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீருக்குள் குதிக்கும் போது பாறை ஒன்றில் மோதியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல கனவுகளுடன் பயணித்த இம் மாணவனின் உயிர் இடை நடுவில் பிரிந்ததையிட்டு கவலையடைவதுடன் மாணவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here