கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
போன் கதைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீ பற்றியுள்ளது. இதனையறிந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பைக்கை விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளார்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு குறித்த தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.