யாழில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு.!

0
115

வீதியில் மயங்கி விழுந்த, யாழ் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்…

குறித்த மாணவன் அவரது நண்பருடன் நேற்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

குறித்த மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here