2 சிறுமிகள் து.ஷ்.பி.ர.யோ.க.ம் – பிக்கு ஒருவர் கைது.!

0
88

மொனராகலை – வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய​ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவ்விரு சிறுமிகளையும் சிறுமிகளின் தாய்மார்களையும் பொலிஸார் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here