பண்டாரவளை – பதுளை வீதியில் திக்கராவ வளைவில் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வழுக்கிச் சென்று பஸ்ஸின் பின் சக்கரத்தில் சாரதியின் தலை சிக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் சிறியளவில் மழை பெய்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.