இரு தனியார் பேரூந்துகள் மோதியதில் 20 மாணவர்கள் காயம்.!

0
176

கடுவெல, ரணால பிரதேசத்தில் தனியார் பேருந்தும் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று (19) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து லம்புகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், அம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் ஒன்றே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர்கள் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.