யாழ் விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பரிதாப மரணம்.!

0
137

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

கைதடிப் பகுதியில் மின்னொளியில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இளைஞன் நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணியளவில் நீர்வேலிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கலைப்பிரியன் வயது 17 என்ற இளைஞன் இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் கோப்பாய் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது, மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here