இலங்கை அழகியின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை.!

0
70

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார்.

பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன.

80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொழும்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பியூமி ஹன்சமாலியின் பல வங்கிக் கணக்குகளில் குறுகிய காலத்தில் வைப்பிலிப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here