வவுனியாவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது, ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நில அதிர்வு வவுனியா மக்களாலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.