பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஷரீப் புரா பகுதியிலுள்ள வீடொன்றில் லெப்டொப் ஒன்று சார்ஜ் போடப்பட்டுள்ளது.
அப்போது திடீரென லெப்டொப்பின் பேட்டரி வெடித்து சிதறியுள்ளது.
இதனால் வீட்டில் தீப்பிடித்து, அது மளமளவென்று வீடு முழுவதும் பரவியுள்ளது.
இந்த தீப் பரவலினால் வீட்டிலிருந்த 9 பேர் பலத்த காயத்துக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவனும் சிறுமியும் இறந்து போயுள்ளனர்.
அவர்கள் இருவரும் அண்ணன் மற்றும் தங்கை உறவுமுறையினர். ஏனையவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மின் சாதனங்களை சார்ஜ் போடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
சில வேளைகளில் பேட்டரி அதிகமாக சூடாகும் பட்சத்தில் அது வெடித்துச் சிதறி இதுபோன்ற உயிர்பலிகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.