கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவினின் விசாரணையில்.!

0
104

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 19.06.2024 அன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தருமாறு முல்லைத்தீவில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இதன் பிரகாரம் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைபிரிவு அலுவலகம் சென்றபோது அவர் அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து இன்றும் (20) தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரின் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here