மின் கம்பம் விழுந்ததில் மின்சார சபை ஊழியர் பரிதாப மரணம்.!

0
109

நுவரெலியா பிரதேசத்தில் ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மின்சார கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார சபை ஊழியரொருவரே உயிரிழந்துள்ளார்.

மின்சார சபைக்குச் சொந்தமான லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற மின் கம்பம் ஒன்றை லொறியிலிருந்து இறக்க முயன்ற போது மின் கம்பமானது மின்சார சபை ஊழியரின் மீது தவறி வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹங்குரன்கெத்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here