பிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த நபரால் பரபரப்பு.. இலங்கையில் சம்பவம்.!

0
124

புத்தளம் – மதுரங்குளிய பகுதியில் பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மதுரங்குளிய, தென்னந்தோப்பு காணியில் பணிபுரிந்து வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் பொலி்ஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த காவலர் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்திய போது குறித்த நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டை செய்த காணி உரிமையாளர் வென்னப்புவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நபர் உண்ணாமல் இருந்ததால் மயக்கமடைந்து தூங்கிவிட்டதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here