அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.!

0
120

கடுகன்னாவ மற்றும் பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று (21) பிற்பகல் இளைஞன் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை பேராதனை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், கடுகன்னாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை நாவுல அலஹெர மொரகஹகந்த வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதிகள் இருவர் மற்றும் பின்னால் சென்ற ஒருவரும் காயமடைந்து கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கலேவல பன்சியகம வீதியின் அலுத்வெவ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதி வீதிக்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here