யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருடன் சகஜமாக பேசி அவருடைய மோதிரம் மற்றும் சிறுதொகைப்பணம், கைப்பை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபர் சிசிரிவி கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) நோயாளர்களின் பார்வையாளர் நேரத்திலேயே நூதனமான முறையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நோயாளி கடந்த 19ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.