17 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பொசன் பௌர்ணமி அன்று காலை (21) தனது சித்தியுடன் தன்சலுக்கு சென்றுள்ளார்.
அவர் தனது சித்தியிடம் புத்தக கடைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனை சந்திக்க சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டிக்கு செல்லும் போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஹன்வெல்ல அம்குகம பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று தன்னை வன்புணர்வு செய்ததாக ஹன்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி நேற்று (21) இரவு சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்த பொலிஸார், பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த ஹங்வெல்ல பொலிஸார் இன்று (22) காலை பிரதான சந்தேக நபர் என கூறப்படும் 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.