யாழில் அப்பம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 17 வயது இளைஞன் சிறுவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞன் க,ழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தந்தை மற்றும் அப்பம்மாவின் அரவணைப்பில் குறித்த சிறுவன் மற்றும் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தநிலையில் மன அழுத்தத்தில் குறித்த சிறுவன் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த அருண் அபிஷேக் (வயது-17) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.