முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (26) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள LOLC தனியார் கம்பனியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் (அதியுயர் மின்சாரம்) தாக்கி கீழே (மாடியில்) விழுந்துள்ளார்.
மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி (தரையில்) கீழே வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.