ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்ப்பு.!

0
107

ஜா – எல ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (25) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லம, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு – சிலாபம் ரயில் மார்க்கத்தில் பயணித்த ரயிலொன்றில் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here