யாழில் பால் புரைக்கேறியதில் ஒரு மாத குழந்தை பரிதாப மரணம்.!

0
157

யாழ்ப்பாணம் – இணுவில் கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் அதிகாலை குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here