தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ் பல்கலைக்கழக மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்.!

0
150

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

102 ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருமான நேசராசா டக்ஸிதா, மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here