மதுபானம் என நினைத்து விஷம் கலந்த பானத்தினை அருந்திய 6 மீனவர்களில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே அதனை அருந்தியுள்ளனர்.
நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மீனவர்களை உடனடியாகக் கரைக்குக் கொண்டு வருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்காலை பள்ளிக்குடா பகுதியிலில் கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.