நீச்சல் குளத்தில் நீராடிய 5 வயது குழந்தை பரிதாப மரணம்.!

0
160

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற சிறு குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

கொழும்பு 09 – தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும் பல குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீந்திய போது குழந்தை நீரில் மூழ்கியுள்ளது.

பின்னர் குழந்தையின் தந்தையால் ஜாஎல பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here