கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி – வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
அந்தச் சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.