தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.!

0
99

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மற்றும் சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…

“எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும்.” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here