அநுராதபுரம் பிரதேசத்தில் ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் இன்று (1) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் வைத்து கடந்த 30 ஆம் திகதி காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் இன்று (1) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.