கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய நபர் கைது.!

0
88

பியகம, மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது கள்ளக்காதலி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here