புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கசிப்பு அடித்தவர் உயிரிழப்பு.. கொலையா..?

0
150

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்…

சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய நாகரத்தினம் சுயதீபன் என்ற குடும்பஸ்தர் வீட்டில் மயங்கிய நிலையில் நேற்று (02) மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

களுத்தில் காயம் காணப்படுவதால், இந்த நிலையில் 03.07.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காணப்பட்டுள்ளது, கழுத்தில் காயங்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதாகவும் அவர் அதிக மது அருந்தி மயங்கிய நிலையில் நண்பர்களால் தூக்கிக்கொண்டுவந்து வீட்டில் விடப்பட்டுள்ள நிலையில் அவர் விழித்துக்கொள்ளாத நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here