மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நேற்று (03) சோதனை செய்த போது தலவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மது விங்பனை நிலையத்தில் இருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.