யுக்திய 2 நடவடிக்கையுடன் இணைந்தாக இன்று (04) காலை அம்பலாங்கொடை ஆந்தாதொல பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கையில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது 5 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.