யாழ் வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேலணை – துறையூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதான மீனவரே கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் நேற்று சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.