முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 04.07.24 அன்று மேசன் வேலைக்காக வாகனத்தில் வேலைக்காக உயிலங்குளம் வீதி ஊடக தென்னியங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உயிலங்குளம் பகுதி வயல் வெளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வாகனத்தின் சில் ஒன்று காற்று போனதால் வாகனம் பிரண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது,
இதன்போது வாகனத்தில் வேலையாட்கள் நான்குபேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தினை சேர்ந்த 48 அகவையுடைய சின்னத்துரை வாஸ்கரன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனை மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 07.07.24 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்