கடந்த திங்கட்கிழமை (08) அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற கிளப் வசந்த படுகொலை செய்யப்படும் விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிளப் வசந்த உணவு அருந்தும் வேளை திடீரென அங்கு நுழைந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவருக்கு அருகில் சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ள விதம் அதில் பதிவாகியுள்ளது.
அதுருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) திகதி காலை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப் வசந்த” என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.