மாங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் முறிகண்டி பகுதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று கிளிநொச்சி நோக்கிச் சென்ற லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த வேனில் பயணித்த இரு பெண்களும் ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 84 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.