உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு.!

0
91

2024ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதியுடன் திகதி முடிவடையவிருந்ததாகவும், தவிர்க்க முடியாத காரணங்களை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் முன்னர் இணையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென திணைக்களம் தெரிவித்திருந்தது

இதேவேளை இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here