நடன வகுப்பு மாணவிகளை து.ஷ்.பி.ர.யோ.க.ம் – ஆசிரியர் கைது.!

0
143

தனது நடன வகுப்பிற்கு வந்த சிறு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ரணால – படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நடன வகுப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது நடன வகுப்பிற்கு வந்த மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹங்வெல்ல காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here